
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2024-09-14
நான் ஒரு Serial Dater: அதிரடியாக மனம் திறக்கும் ரெஜினா.
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார்.
தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தாலும் ரெஜினாவில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய அவர் "நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். நான் ஒரு சீரியல் டேட்டர்" என்றும் கூறியுள்ளார். ரெஜினா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
