

tamil news ➔ kollywood newsBy sivan|2024-10-04
நடிகை சோனா வீட்டில் திருட்டு
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. 'மிருகம், குசேலன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் சில படங்களிலும், டிவி சீரியலிலும் நடிக்கிறார். சென்னை, மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறத்தில் புகுந்த திருடர்கள் இருவர் அங்கிருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சித்தனர்.
அப்போது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனா, திருடர்களை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்போது திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து சோனா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அடிப்படையாக வைத்து திருடர்களை பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.


