
tamil news ➔ special articles ➔ kollywood newsBy Ottran Dorai|2025-12-23
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2026 பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திரு. ஜி.எம். தமிழ்குமரன் தலைமையிலான ‘தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி’ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் துணைத் தலைவர் பதவிக்கு திரு. ஆர்.கே. சுரேஷ் மற்றும் திரு. எஸ். கமலக்கண்ணன், செயலாளர் பதவிக்கு திரு. ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி. கமீலா நாசர், பொருளாளர் பதவிக்கு திரு. என். சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் பதவிக்கு திருமதி. சுஜாதா விஜயக்குமார் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மூத்த தயாரிப்பாளர்களான திரு. அழகன் தமிழ்மணி, திரு. சித்ரா லட்சுமணன், திரு. எச். முரளி, திரு. எம். கபார், திரு. ஆர். மாதேஷ் ஆகியோருடன், திரு. சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு. எஸ். ஜோதி, திரு. வி. பழனிவேல், திரு. கே. செந்தாமரை கண்ணன், நீல்கிரீஸ் திரு. ஏ. முருகன், திரு. ஜி.எம். டேவிட்ராஜ், டி.என். தாய்சரவணன், திரு. கே. முருகன், திரு. வி. ஞானவேல், திரு. பிரவின்காந்த், திரு. வி.என். ரஞ்சித் குமார், திரு. எஸ். ஜெயசீலன், திரு. ராஜா @ பக்ருதீன் அலி அகமத், திரு. எம். தனசண்முகமணி, திரு. பி.ஜி. பாலாஜி, திரு. இசக்கிராஜா, திரு. பி. மகேந்திரன், திரு. எஸ். பிரப்தீஸ் சாம்ஸ், திரு. ஏ. ஏழுமலை, திரு. எஸ்.என். ராஜராஜன் உள்ளிட்ட பலரும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் 22-12-2025 அன்று சென்னை ஹோட்டல் ராதா பார்க் இன்னில் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் திரு. கலைபுலி எஸ். தாணு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் பெப்சி தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, பேராசிரியர் திரு. ஏ.எஸ். பிரகாசம், திரு. வி.சி. குகநாதன், இசையமைப்பாளர் திரு. தீனா, இயக்குனர்கள் திரு. லிங்குசாமி மற்றும் திரு. சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு. ஜி.எம். தமிழ்குமரன் மற்றும் திரு. ஆர். ராதாகிருஷ்ணன், தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.
பெருவாரியான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த அறிமுகக் கூட்டம் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
