நடிகர்கள் கமல் ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், சான்யா மல்கோத்ரா, வடிவுக்கரசி என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து முன்னதாக ஜிங்குச்சா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல அடுத்ததாக சுகர் பேபி என்ற பாடலை படக்குழு வெளியிட உள்ளது. மேலும் கடந்த 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு, அதைப் பற்றிய பேச்சுகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நடிகர் கமல் ஹாசனின் முத்தக் காட்சியும் ரொமான்ஸ் காட்சிகளுமே அதிகமா பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தின் சென்சார் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு சென்சார் போர்ட் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. https://x.com/RKFI/status/1924476434153885962?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1924476434153885962%7Ctwgr%5E00918735bf732ca8fddecf6b8744ebc942a8b03c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F மேலும் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 2 மணி நேரம் 45 நிமிடம் 42 வினாடிகள் ஓடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள இந்த மணிரத்னம் மற்றும் கமல் ஹாசனின் கூட்டணியில் உருவான இந்தப் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.