
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-03-22
ட்ரெண்டிங் ஆகும் சூர்யாவின் கனிமா பாடல்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. விவேக் இந்த பாடலை எழுதியுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை பாடியுள்ளார். தற்போது இந்த பாடலை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
