
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy sivan|2025-05-02
டூரிஸ்ட் ஃபேமிலி திரை விமர்சனம்!
சிம்ரன், சசிகுமார், bயோகி பாபு M S பாஸ்கர், ரமேஷ் திலக் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைப்பில் இயக்குனர் அபிசன் ஜீவிந் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
சமீபத்தில் நடந்த இலங்கைப் பிரச்சனையால் விலைவாசி அதிகம் ஏறிய காரணத்தினால் சசிகுமார் அவரது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்கள் உட்பட கள்ளத் தோணியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். தனது வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் எம் எஸ் பாஸ்கர் போன்ற ஆட்களிடம் வாகன ஓட்டியாக வேலைக்கு செல்கிறார் சசி குமார். ஆனால் அதே சமயம் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுகிறது. இதற்கு காரணம் இந்த குடும்பமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. நிஜமாகவே சசிகுமார் குடும்பம் தான் இங்கு குண்டு வைத்ததா அல்லது இவர்கள் நினைத்தபடி வாழ்க்கை வாழ முடிந்ததா என்பதை நகைச்சுவையாகவும் சிந்திக்கும் தன்மையுடனும் சொல்லிய படம் தான் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி.
அயோத்தி படத்திற்குப் பிறகு சசிகுமாருக்கு இந்த படம் ஒரு நல்ல பெயரை வாங்கித் தரும். சிம்ரனின் யூத் படத்தில் ஆடிய அந்த ஒரு பாடல் போதும் சிம்ரன் சிம்ரன் தான் என்று சொல்வதற்கு. இவர்கள் மட்டும் இல்லாமல் இந்த படத்தில் குட்டி பையன் கதாபாத்திரத்தில் ஒரு பையன் நடித்திருப்பார் அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சம் தொடுவார் என்று நம்பலாம். இவர்களை தவிர படத்தில் நடித்த அனைத்து கதை மாந்தர்களும் குறிப்பாக குமரவேல் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோரது நடிப்பு மிகவும் பிரமாதம்.
முதல் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் இரண்டாம் பாதையில் சற்று தெளிவாகவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. காரணம் இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் ஜவ்வாக இழுக்கிறது. இறுதிக்கட்டத்தில் ஏதாவது கருத்து சொல்ல வேண்டியது என்ற கட்டாயத்தில் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இசையமைப்பாளர் சான் ரோல்டனின் இசை வழக்கமாகவே ஒரு ரகத்தை கொடுத்தாலு,ம் இந்த படத்தில் பின்னண இசை வேறொரு ரகத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளரின் அற்புதமான ஒளிப்பதிவு இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது .
இந்தப் படத்தில் இயக்குனரான அபிஷன் ஜீவிந், இவருக்கு முதல் படம் ஆனாலும் முதல் படம் தான் எடுக்கிறோம் என்ற பதட்டமில்லாமல் நேர்த்தியான ஒரு கதையை கொடுத்திருக்கிறார் இவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
என்னதான் திரை விமர்சகர்கலாகிய நாம் ஒரு படத்தைப் பற்றி புகழ்ந்து பேசினாலும் மக்கள் தான் ஒரு படத்தை நல்லா இருக்கிறது இல்லை என்று கூறக்கூடிய மிகப்பெரும் சக்தி கொண்டவர்கள். ஒருவேளை இதன் மாதிரியான படங்களை கொண்டாடினார்கள் என்றால் கதாநாயகர்களுக்கான படம் என்ற சுவடு தமிழ் சினிமாவில் இருந்து விட்டு ஒளியும்.
ஆக மொத்தத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு நல்ல காமெடி நிறைந்த கருத்து சொல்லும் படம்.
