
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-02
ஜிவி பிரகாஷின் அடங்காதே படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான படம் அடங்காதே.
தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினை, தணிக்கை பிரச்சினை என பல்வேறு தடங்கல்களால் வெளியாகாமல் இருந்தது.
தணிக்கை பிரச்சினை சரியாகிவிட்ட பிறகும், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினையும் பேசி தீர்க்கப்பட்டு, ஜூனில் 'அடங்காதே' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்ரீக்ரீன் நிறுவனம் சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்தினை இ5 நிறுவனம் கைப்பற்றி உலகமெங்கும் வெளியிடவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று தயாரிப்பாளர் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
