பிக் பாஸ் புகழ் தர்ஷன், லால், சுஜித் சங்கர், மன்சூர் அலிகான், முனீஸ் காந்த் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் விகாஷ்படிசா இசையமைப்பில் மெய்யேந்திரன் ஒளிப்பதிவில் கௌதமன் கணபதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார் தர்ஷன். அதே காவல் நிலையத்தில் சீனியர் கான்ஸ்டபிளாக நடிகர் லால் பணிபுரிகிறார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்கின்றனர். பதில் நடிகர் மன்சூர் அலிகான் அவருடைய துப்பாக்கியையும் சரண்டர் செய்கிறார். ஆனால் அதிலிருந்து அவர் துப்பாக்கி மட்டும் காணாமல் போய்விடுகிறது. மறுபுறம் ரவுடியாக இருக்கும் சுஜித் சங்கர் தேர்தலுக்காக 10 கோடி நிதியை கட்சிக்கு கொடுக்கிறார். ஆனால் அந்த பணம் காணாமல் போகிறது. இந்த இரண்டு கதைகளும் ஒரு இடத்தில் சேருகிறது, அதன் பின்பு என் ஆனது என்பதே சரண்டர் படத்தின் கதை. தர்ஷனுக்கு இது முதல் படம் தான் என்றாலும் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார், சுஜித் சங்கர் வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார். லால் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். முனீஸ்காந்த் நடிப்பில் கோட்டை விட்டிருக்கிறார். திரைக்கதையை பொருத்தவரையில் முதல் காட்சி முதலே பரபரப்பான திரைக்கதையுடன் நம்மை கதைக்குள் கொண்டு சென்று விடுகிறார் இயக்குனர். மலையாள பட த்தை பார்க்கும் உணர்வு தான் சரண்டர் படுத்தி பார்க்கும் போது ஏற்படுகிறது. விறுவிறுப்பாகவும் வித்தியாசமான காட்சி அமைப்புடன் அனைவரையும் கவர்ந்துள்ளார். படத்தின் வசனங்கள் மிகவும் எதார்த்தமாக எதார்த்தமாக உள்ளது தனிச்சிறப்பு. ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இசையில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த படத்தின் குறையாக பார்க்கப்படுவது முனீஸ் காந்த்தின் காட்சிகள் மட்டுமே. அதில் மட்டும் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த படத்தின் இயக்குனர் கௌதமன், காவல் நிலையத்திற்குள் காவலர்களுக்கு இடையில் உள்ள பாலிடிக்ஸ், தேர்தல் சமயத்தில் இருக்கும் பரபரப்பு, காவலர்களுக்கும் ரவுடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் கௌதமன். படம் முழுக்க சண்டை காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தத்தில் சரண்டர் படம் எப்படி இருக்கிறது என்றால், மலையாள படங்களை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு எப்படி ஒரு அனுபவம் இருக்குமோ, அதேபோல சரண்டர் படமும் நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.