
tamil news ➔ special articles ➔ kollywood newsBy Ottran Dorai|2025-11-07
குடும்ப உணர்வுகளையும் சமூக நிதர்சனங்களையும் ஒருங்கே சொல்லும் படம் 'மிடில் கிளாஸ்'
குடும்ப பிணைப்புகளின் உண்மையையும், மிடில் கிளாஸ் வாழ்க்கையின் சிக்கல்களையும் நகைச்சுவையுடன் சித்தரிக்க வரும் புதிய தமிழ் திரைப்படம் ‘மிடில் கிளாஸ்’. இப்படத்தை இயக்கியிருப்பவர் கிஷோர் எம். ராமலிங்கம். “இது ஒரு குடும்பப் படம் தான், ஆனால் பல ஜானர்களின் தாக்கத்தையும் கொண்டிருக்கும்” என்று அவர் கூறியிருப்பது, இப்படம் வழக்கமான எமோஷனல் டிராமாவை விட வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று காட்டுகிறது.
முன்னிஷ்காந்த் ராமதாஸ் மற்றும் விஜயலட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், ஒரு சாதாரண குடும்பத்தின் கனவுகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக மாற்றங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. கிராமத்தில் நிலம் வாங்கி அமைதியாக வாழ விரும்பும் கணவன், நகர வாழ்க்கையின் பெருமையை கனவாகக் காணும் மனைவி—இவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதைக்குரிய மையம்.
ஒரு யூடியூப் சம்பவம் இவர்களின் வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக மாற்றி விடும் என்ற திருப்பம், இப்படத்துக்கு புதுமையான த்ரில்லையும் வேகத்தையும் கொடுக்கிறது. முதலில் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு தொடங்கும் இப்படம், பின்னர் சஸ்பென்ஸ் நிறைந்த திசைக்கு நகரும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இது குடும்ப வாழ்க்கையின் உண்மை சித்திரத்தையும், சமகால சமூகத்தின் தாக்கத்தையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது.
விஜயலட்சுமி கூறுகையில், “மிடில் கிளாஸ் குடும்ப பெண்களின் கனவுகளும் நிதர்சனங்களும் இணைந்த பாத்திரம் இது. எங்களது உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் பல இதில் பிரதிபலிக்கின்றன” எனவிஜயலட்சுமி பகிர்ந்துள்ளார். முனீஷ்காந்த் சொல்லியதாவது, “இது ஹீரோ மையப்படம் அல்ல. உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கும் குணச்சித்திரம் நிறைந்த படம் என்பதால் அதை ஏற்றுக்கொண்டேன்” என்று முனீஷ்காந்த் கூறியுள்ளார்.
சுதர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்குந,பிரணவ் முனிராஜ் இசையமைதுள்ளார். Axess Film Factory மற்றும் Good Show ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், நவம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியல் போராட்டங்களையும், அவரின் கனவுகளையும் நகைச்சுவையுடனும் உணர்ச்சியுடனும் சொல்லும் இந்த படம், மிடில் கிளாஸ் வாழ்க்கையின் உண்மையான பிரதிபலிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
