
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-09-23
காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது வேட்டையன் படத்தின் டிரைலர்
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். என்கவுன்டர் தொடர்பான கதையில் ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியானது. அக்., 10ம் தேதி படம் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இதன் டிரைலரை வருகின்ற அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
