ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.   நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜன. 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகவுள்ளது.   https://x.com/RedGiantMovies_/status/1875153883842179140?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1875153883842179140%7Ctwgr%5Eeef42353683ecc888f14f7348f7c49a168f2886f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F   முன்னதாக இப்படத்தில் இடம்பெற்ற, 'என்னை இழுக்கதடி' பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது. இரண்டாவது பாடலான, 'லாவண்டர் நிறமே..' பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.   இந்த நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடலான 'பிரேக்-அப் டா' பாடல் நாளை(ஜன. 4) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.