நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படம் சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் விடியோ வெளியிட்டு பேசியுள்ளார். அதில் அமிதாப் பச்சன் பேசியதாவது: அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்ததுக்கு மகிழ்ச்சி. அற்புதமான படக்குழுவினர். கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்றவர்களுடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. பிரபாஸுக்கு 1000 கோடி ரூபாய் வசூல் என்பது மிகவும் வழக்கமாகிவிட்டது. ஏனெனில் அவரது நிறைய படங்கள் இப்படி வசூலாகியுள்ளன. ஆனால் எனக்கு அப்படியில்லை. இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏற்கனவே 4 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்கு புதியதாக ஒன்றை கண்டுப்பிடிக்க முடிகிறது. கல்கியை இவ்வளவு பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி எனக் கூறியுள்ளார். https://twitter.com/Kalki2898AD/status/1813463817738760593?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1813463817738760593%7Ctwgr%5Ee2e2d9a0ea40060cf54a5695bbb4c5ea41dbfeeb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F