கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு 15 நாட்கள் முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் கமல், சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் மாஸான குத்துப் பாடல் ஒன்றைப் படக்குழு படமாக்கி இருக்கிறார்களாம் . இதில் சிம்பு மற்றும் கமல் ஆகியோர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிலும் சிம்பு குத்தாட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடனத்தில் கமலை மிஞ்சுவாரா சிம்பு என்று அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.