சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கருணாஸ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான படம்.
கதைப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சிறுவனுக்கு சூர்யா செய்த சத்தியத்தை இன்றைய காலகட்டத்தில் காப்பாற்றுவதற்காக போராடுவது தான் கதைக்கரு.
படத்தின் மிகப்பெரிய பலமே ஆர்ட் ஒர்க். கேமரா ஒர்க்கும் மிக மிக அருமையாக உள்ளது.
நடிப்பில் சூர்யா வேறொரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி அடிக்கும் லூட்டீகள் அனைவரையும் சிரிக்க வைக்கின்றன.

DSP யின் இசை படம் முழுக்க நெகிழ வைக்கின்றன. பாடல்கள் அனைத்தும் முத்து முத்தாக உள்ளன.
ஒரு கற்பனையான தீவுக்கு ஒரு முத்தாய்ப்பான சொல் அகராதியை உபயோகப்படுத்தி இருக்கிறார் மதன் கார்க்கி..

படத்தின் இறுதியில் சூர்யா வெர்சஸ் கார்த்தி என்று முடித்திருப்பது, கங்குவா பார்ட் 2 க்கு இன்னும் வலு சேர்க்கும் என்றே சொல்லலாம்.

கலையில் சின்ன பையனாக நடித்திருக்கும் அந்த பையனின் நடிப்பும் மிக மிக அருமை.
ஒட்டுமொத்தத்தில் கங்குவா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாகவே அமையும்.

ஆனால் படத்தில் குறை என்று சொன்னால், படம் முழுவதும் இரண்டு அணியினர் கத்திக் கொண்டே இருக்கின்றனர் அதை மட்டும் குறைத்து இருந்திருக்கலாம். அதேபோல் நிகழ்காலம், கடந்த காலம் என்று இரண்டு விதமான கோணங்களில் திரைக்கதையை சொல்லி இருக்கும் யுத்தி பல பேருக்கு புரியாமலும் போகலாம். குறிப்பாக இறுதி சண்டைக் காட்சியில் ஒரு சில confusions வரும். ஆனால் அதுதான் படத்தின் அடுத்த பாகத்திற்கு லீட் என்பது இறுதியில் புரியவரும்.
மொத்தத்தில் கங்குவா படம், ஒரு புது அனுபவத்திற்காக பார்க்கக்கூடிய படம்.

