.
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-08-07
எஸ் எஸ் ராஜமௌலி உடன் இணையும் சீயான் விக்ரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் விக்ரம். இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்கங்கள் வெளியாகும் என பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விக்ரம் எஸ்.எஸ்.ராஜமவுலி எனக்கு மிகவும் பிடித்த நண்பர் என கூறியதுடன் அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் இணைய போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அது எப்போது என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு “எஸ்.எஸ்.எம்.பி 29” என்ற படத்தில் விக்ரம் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாகவும் பிருத்திவிராஜ் வில்லனாகவும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் படகுழுவினர் படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோ ஹீரோயினை பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்
.
.