இப்படத்திற்கு 'பைசன் - காளமாடன்' எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது, இதன் படப்பிடிப்பு 70% முடிவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

tamil news ➔ kollywood newsBy sivan|2024-07-22
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் துருவ் விக்ரமின் 'பைசன் காளமாடன்'.
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.
துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்ர். இதில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும், முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்.