

tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2024-07-10
இன்று மாலை வெளியாகிறது தங்கலான் பட டிரைலர்.
பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் 'தங்கலான்'.
இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். பா.ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கின்றன.
இந்நிலையில் 'தங்கலான்' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

