
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-04-07
இந்த நான்கு படங்களாவது தமிழ் சினிமாவை காப்பாற்றுமா?
தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாக வெளியாகும் படங்கள் அனைத்துமே, மக்களை பெரிதும் ஈர்க்காமல் தியேட்டரில் வெளியான பாதி நாட்களிலேயே திரும்ப சென்று விடுகிறது.
விடாமுயற்சி, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த உதாரணம்.
இந்த ஆண்டின் காலாண்டு, ஏற்கனவே முடிந்து விட்டது. 70க்கும் மேற்பபட்ட படங்கள் வெளியாகி இருந்தாலும், அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி, சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி திரைப்படம் காலை வாரிவிட்டது. ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படமும் நெகடிவ் விமர்சனங்களை பெற, விஜய் ஒரேடியாக சினிமாவை விட்டுவிட்டு, ஜன நாயகன் படத்துடன் சினிமாவிற்கு குட்-பை சொல்ல இருக்கிறார். இப்படி படுத்துக்கிடக்கும் கோலிவுட்டை தலை நிமிர வைக்க தமிழ் நடிகர்கள் கம்-பேக் கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், இந்த 4 படங்களால்தான் முடியும் என சிலர் கூறி வருகின்றனர். அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
அஜித்திற்கு கடைசியாக வெற்றியை தேடித்தந்த படம் எது?" என்று கேட்டால், "மங்காத்தா" என்ற பதிலை அவர்களே கூறுவார்கள். காரணம், அஜித் நடிப்பில் அதன் பிறகு வெளியான படங்கள் அனைத்தும் கமர்ஷியல் ஹிட் கொடுத்துள்ளனவே அன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெறவில்லை. நம்பியிருந்த விடாமுயற்சி படமும், கைவிட்டு விட்டது. இதையடுத்து, அவரது தாெய்வான திரை வாழ்வை 'குட் பேட் அக்லி' படம்தான் கைக்கொடுத்து தூக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. படத்தின் டிரைலரும் பார்ப்பதற்கு பக்கா எடிட்டிங்குடன் மாஸாக இருந்ததால், இது அஜித் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம், வரும் 10ஆம் தேதி வெளியாகிறது.
ரெட்ரோ:
சூர்யாவுக்கு மறக்க முடியாத தோல்வியை கொடுத்த படம், என கங்குவா படத்தை சொல்லலாம். பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், எட்டுத்திக்கில் இருந்தும் நெகடிவ் விமர்சனங்களால் தாக்கப்பட்டு, வசூலிலும் மரண அடி வாங்கியது. இது மட்டுமல்ல, சூர்யா நடிப்பில் வெளியான சமீப கால படங்கள், ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரெட்ரோ படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தின் கண்ணாடி பூ மற்றும் கண்ணிமா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு பிடித்தார் போல உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளும் நடைப்பெற்று முடிந்தது, குறிப்பிடத்தக்கது. இப்படம் மே 1 வெளியாகிறது.
தக் லைஃப்:
கமல்ஹாசனுக்கு, 2024ஆம் ஆண்டு, மோசமான ஆண்டாக அமைந்ததற்கு முழு காரணம், இந்தியன் 2 திரைப்படம். எதிர்பார்த்து போன ரசிகர்களை ஏமாற்றிய இந்த படம் வெளியான பிறகு, கமல்ஹாசன் ஏஐ படிக்க அமெரிக்கா சென்றுவிட்டார். தற்போது மீண்டும் இந்தியா வந்திருக்கும் இவர், தக் லைஃப் ஷூட்டிங்கை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. நாயகன் படத்திற்கு பிறகு கமலும் மணிரத்னமும் இணையும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. போதாக்குறைக்கு சிம்புவும் படத்தில் இருக்கிறார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி டீசரும் மக்களை கவர்ந்தது. படம், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.
கூலி:
லோகேஷ் கனகராஜ்-ரஜினி முதன்முறையாக இணைந்திருக்கும் படம், கூலி. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல், கதாப்பாத்திர தேர்வுகள் வரை அனைத்துமே ஃபயர் ஆக இருந்தது.
கூலி படத்தில், ரஜினிகாந்த் தேவா எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டுமன்றி சத்யராஜ் பல ஆண்டுகளுக்கு பிறகு இவருடன் இணைந்து நடிக்கிறார். கூடவே, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹிர், உப்பேந்திரா உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
