
tamil news ➔ Kollywood NewsBy Ottran Dorai|2026-04-25
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனுடன் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’ – விரைவில் திரையரங்குகளில்!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இந்த படம், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள குடும்ப ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தாய், தந்தை மற்றும் மகளை மையமாக கொண்ட குடும்பம் ஒன்றுக்கும், அதனை அச்சுறுத்தும் கொடூர கும்பலுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்களே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான தலைப்பு மற்றும் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், ‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளியீட்டை நோக்கி தயாராகி வருகிறது.
