
tamil news ➔ kollywood newsBy sivan|2025-03-27
அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்? ஆடிப்போன சன் பிக்சர்ஸ்!
இந்தியில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்க அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
சொல்லப்போனால், தொடர்ந்து தோல்விப் படங்களையே சந்தித்து வந்த இந்தி சினிமாவுக்கு ஜவான் வெற்றி எனர்ஜி பூஸ்டாக அமைந்தது. ஏனெனில் இந்த திரைப்படம் உலக அளவில் 1000 கோடியை வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்திற்காக அட்லீ கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து ஒட்டுமொத்த சன்பிக்சர்ஸ் நிர்வாகத்திற்கும் தலை சுற்றிவிட்டதாம். போதாக்குறைக்கு அட்லீ வேறு 100 கோடி அளவிற்கு சம்பளம் கேட்க இருந்ததாகவும், ஆனால் சன் பிக்சர்ஸ் அக்ரீமெண்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 55 கோடி ரூபாயை மட்டுமே தர முடியும் என கறாராக கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
இது ஒரு புறம் இருக்க தற்போது சன்பிக்சர்ஸிடம் அல்லு அர்ஜுன் என்ன சம்பளம் கேட்டிருக்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 1 மற்றும் 'புஷ்பா 2 தி ரூல்' படங்கள் அல்லு அர்ஜூனை பான் இந்தியா ஸ்டாராக ஜொலிக்க வைத்துள்ளது. இந்தப் படம் ரூ.1800 கோடியை வசூலித்தது. படங்கள் கோடிகளில் வசூல் குவித்தால் அடுத்த படத்திற்கு ஹீரோக்கள் வழக்கமாக செய்வது என்ன? சம்பளத்தை டபுள், சில சமயம் ட்ரீபுள் மடங்காக கூட உயர்த்திவிடுவார்கள். அந்த வகையில் அல்லு அர்ஜூன் இயக்குநர் அட்லீ இயக்கவுள்ள பான் இந்தியா படத்தில் நடிக்க 170 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம். ஏற்கனவே அட்லீ கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து சன் பிக்சர்ஸ் மிரண்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அல்லு அர்ஜூன் வேறு தனது பங்கிற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. பட அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிடுமா? என்பது சந்தேகமே!
