MGP மாஸ் மீடியா நிறுவனம் தயாரிப்பில், இஷான், ப்ரணாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், சுப்பிரமணி, நிஷ்மா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் "அரியவன்". யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றிப்பட இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கிரிநந்த், வேத் ஷங்கர், ஜேம்ஸ் வசந்தன் என மூன்று இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இஷான் மற்றும் ப்ராணலி இருவரும் காதலர்கள். திடீரென ஒரு நாள், ப்ராணலியின் தோழியான நிஷ்மா தற்கொலைக்கு முயற்சி செய்ய. ப்ராணலி தடுத்துவிடுகிறார். அப்போது, அவரின் இந்த முடிவுக்கு காரணம் அவரை காதலிப்பதாக சொல்லி ஒருவர் அவரை ஏமாற்றி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை ப்ராணலியிடம் கூறுகிறார்.
அதன் பின் அந்த வீடியோவை டெலீட் செய்ய வேண்டும் என ப்ராணலி அவரிடம் கூற சண்டை வருகிறது. அந்த சண்டையில் எதிர்பாராத விதமாக அவரின் கையை துண்டித்துவிடுகிறார் இஷான்.
ஆனால், அவருக்கு தெரியாது இது ஒரு பெரிய நெட்வர்க் என்று. கை துண்டிக்க பட்ட நபர் யாரென்று பார்த்தால் அவர் டேனியல் பாலாஜியின் தம்பி. பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை பாலியல் தொழிலாளர்களாகி பணம் சம்பாதிப்பது தான் அவரின் தொழில். அவர் பிரபல தாதாவும் கூட. எனவே, தனது தம்பியின் கையை வெட்டியா இஷானை கொலை செய்ய வேண்டுமென வெறியோடு கிளம்புகிறார் டேனியல் பாலாஜி.
இஷான் மற்றும் டேனியல் பாலாஜி இருவருக்கும் இருந்த மோதல் என்ன ஆனது? பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டார்களா? இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்பது இப்படத்தின் இரண்டாம் பாதி.
ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இஷான் சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார். ஆனால், நடிப்பில் இவர் ஒரு அறிமுக நாயகன் என்பதை உணர்த்திவிடுகிறார். இவரின் உயரம் மற்றும் குரல் இவருக்கு பெரும் பலம். ஹீரோ ரோலில் நடிப்பதை விட, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் இவருக்கு வரவேற்பு பெரிதாக இருக்கும். நடனம் நன்று.
நேத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ராணலி எமோஷன் காட்சிகள், ரோமன்ஸ் காட்சிகள் என இரண்டிலும் கச்சிதமாக நடித்துள்ளார்.
நிஷ்மா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் காமெடி நடிகர் சத்யனை திரையில் பார்த்தது மகிழ்ச்சி.
டேனியல் பாலாஜி, வில்லனாக நடிக்க டேனியலிடம் பயிற்சி எடுக்க வேண்டும் அந்த அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்ட கூடியவர் டேனியல் பாலாஜி. ஆனால், இந்த படத்தின் அவர் நடிக முயற்சி செய்துள்ளாரே தவிர அவர் நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை.
மித்ரன் ஆர் ஜவகர் இயக்கம் வழக்கம் போல் சிறப்பு. படத்தில் தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லை. கதையை ஒட்டியே படம் பயணிப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
விஷ்ணு ஷிர் ஒளிப்பதிவு சிறப்பு. ஆக்ஷன் காட்சிகளை லைவாக காண்பிக்க முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்.
கிரிநந்த், வேத் ஷங்கர், ஜேம்ஸ் வசந்தன் என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தும் படத்தின் பாடல்கள் சுமாராகவே அமைந்துள்ளது. டேனியல் பாலாஜிக்கு அமைக்கப்பட்ட பின்னணி இசை பாராட்டும் வகையறா.
அரியவன் - மங்கையர்க்கு அரசன்

