tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-06-29
அமெரிக்காவில் ஷூட்டிங்கா..? - அஜித்தின் குட் பேட் அக்லீ அப்டேட்!
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்துக்கு, 'குட் பேட் அக்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து தென் அமெரிக்காவில் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
