
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-03-17
அஜித்தின் OG சம்பவம் நாளைக்கு!
பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
நடிகர் அஜித் குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த டீசரில் அஜித் இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியானது.
நாளை முழு பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கு OG Sambavam என்று தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என்று அர்த்தம்.
