
tamil news ➔ kollywood newsBy sivan|2025-03-11
அஜித்தின் GBU லேட்டஸ்ட் அப்டேட் பற்றி தெரியுமா?
மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் பேட் அக்லி.
இந்த படத்துக்காக அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல் எடையை குறைத்து வித்தியாசமான பல கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
ரசிகர்கள் இந்த டீசரில் என்ன எதிர்பார்த்தார்களோ அதை 100 சதவீதம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பூர்த்தி செய்திருந்தார். வாலி, அமர்க்களம், பில்லா, ரெட் என அஜித்தின் பழைய படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் டீசரில் இடம்பிடித்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது. இதன் காரணமாக யூடியூபில் சக்கைப்போடு போட்ட குட் பேட் அக்லி டீசர், 24 மணிநேரத்தில் 30 மில்லியன் வியூஸ் பெற்று தமிழில் 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் பெற்ற டீசர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
வரும் ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில திரையரங்குகளில் ஒருநாள் முன்னதாக அதாவது ஏப்ரல் 9-ம் தேதி இரவு 10 மணியளவில் இப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சியை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். தமிழில் இதுவொரு புதிய முயற்சியாகும். தெலுங்கில் வழக்கத்தில் இருக்கும் இந்த டிரெண்டை தற்போது தமிழுக்கும் அறிமுகம் செய்கிறார்கள். இந்த நாளை அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
