
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy sivan|2025-01-03
Xtreme திரை விமர்சனம்.
ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா ஆனந்த் நாக் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது அது யார் என்பதை துப்பறிவதே படத்தின் கதை.
படத்தின் கதை மாந்தர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக அபி நட்சத்திராவின் நடிப்பு அருமையாக உள்ளது.
திரைக்கதை மிகவும் கணிக்க கூடியதாகவே உள்ளன. இருந்தாலும் இந்த கதை சொல்லும் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்தாலும் பாடல்கள் கேட்கும் படியாக இல்லை
முதல் பாதியில் ஏற்படுத்திய வேகமும் தாக்கமும், இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.
கதை ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல், முதல் பாதியில் ஒரு டைரக்ஷனிலும், இரண்டாம் பாதியில் இன்னொரு டைரக்ஷனிலும் பயணப்படுவது தான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கதையை யாரும் கணித்து விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் செய்யும் யுத்தி பெரிதாக ஜொலிக்கவில்லை.
நாச்சியார் படத்தில் பாலா ஏற்கனவே இது மாதிரியான ஒரு கதையை எடுத்து விட்டிருந்ததால், இந்த படம் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் ஒரு பெண் மானபங்கப் படுத்தப்படுவதற்கு அவளின் ஆடையும் ஒரு காரணம் என்பதை இயக்குனர் முன் வைத்திருக்கிறார். கேட்பதற்கு பிற்போக்குத்தனமாக இருந்தாலும் அவர் அடுத்தவரின் பார்வையை வைத்து கதை சொல்லி இருப்பதால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆக மொத்தத்தில் எக்ஸ்ட்ரீம் படம் ஒரு தடவை பார்க்கலாம்.
