சிபி சத்யராஜ், கஜராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி இசையில், இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். கதைப்படி ஒரு மிஸ்ஸிங் கேஸ் நடக்கிறது. அதை துப்பு துலக்க செல்லும் இடத்தில், பஸ்ஸில் ஒரு பெண்ணிடம் ரகளை செய்கிறார்கள் என்று விஷயமும் வருகிறது, அந்தப் பெண் தான் இந்த பெண் தானோ என்று சந்தேகித்து பார்க்கும் பொழுது வேறு ஒரு பெண்ணை கடத்தி ஒரு இடத்தில் தூக்கி எறிகிறார்கள். ஆக இந்த மூன்றுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. அது என்ன என்பதை கண்டுபிடிப்பது 10 ஹவர்ஸ் படத்தின் கதை கரு. நிஜமாகவே ஒரு நல்ல கதை அம்சம் கொண்ட ஒரு படம். குறிப்பாக சிபி சத்யராஜ் பற்றிய ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடும்போது ஒரு நிமிட கார்ட்டூன் ஸ்டோரி ஒன்று போகும் அது அனைவரையும் ஈர்க்கும். சிபி சத்யராஜ் இந்த படத்தில் மெனக்கெட்டு நடித்திருக்கிறார், கூடவே இருக்கும் மற்ற நடிகர்களும் ரொம்ப நன்றாகவே நடித்திருக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை, பலகீனம் இதில் போடப்பட்ட நடிகர்கள். ஏனென்றால் இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் நடிகர்கள் பெரிதாக வெளியில் தெரியாத ஆட்களாக இருப்பதால் இந்த படம் பெரிதாக வெளியில் தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. படத்தின் வசனத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுகள் காரணம் இரவு நேரத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கதையை சுவாரஸ்யம் குறையாமல் அதேபோல் எந்த ஒரு கவர்ச்சிகரமான விளக்குகளையும் பொருத்தாமல் இரவை இரவாக படம் பிடித்து காட்டி இருப்பது தனித்திறந்தை. புதுமுக இயக்குனர் இளையராஜா கலியபெருமாள், நிஜமாகவே ஒரு நல்ல இயக்குனர். அவருக்கு மட்டும் வாய்ப்பு அமைந்தால் நல்ல அழகான தரமான படங்களை கொடுப்பார் என்ற நம்பிக்கை இந்த முதல் படத்தின் மூலம் தெரிகிறது. ஆக மொத்தத்தில் 10 ஹவர்ஸ் ஒரு நல்ல படம் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறதா என்பது மட்டும்தான் சந்தேகம்?