
kollywood newsBy sivan|2024-05-30
Sorry.. அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்றதில்ல - நடிகர் ரஜினிகாந்த்.
வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் தற்போது இமய மலைக்கு பயணமாகியுள்ளார். ஆண்டுதோறும் வழக்கமாக அவர் இமயமலைக்கு செல்லும் நிலையில், இன்று அவர் புறப்பட்டு சென்றுள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு அவர் இமயமலையில் தங்கி இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இந்த சூழலில் ரஜினி இன்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது 'ஒவ்வொரு ஆண்டும் இமய மலைக்கு பயணம் செல்கிறேன். இந்த ஆண்டும் பாபாஜி குகைக்கு செல்வேன்' என்று தெரிவித்தார். அவரிடம் மீண்டும் மோடி வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டபோது 'சாரி அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்காதீர்கள்' என்று பதில் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் தமிழ் சினிமாவில் இசையா? கவிதையா? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அண்ணா அது பற்றி கருத்து தெரிவிக்க மாட்டேன்' என்று கூறினார்
