
tamil news ➔ movie reviews ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-05-02
HIT: Third Case திரை விமர்சனம்!
நானி, ஸ்ரீநிதி ஷெட்டி சமுத்திரகனி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்.
ஹிட் முதல் பாகம், இரண்டாவது பாகம் இரண்டுமே கிரைம் ரகத்தை சேர்ந்தவை. ஆனால் இந்தப் படத்தை ஆக்சன் படமாக எடுத்திருக்கிறார்கள்.
கதைப்படி நானிக்கு உளவியல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கேஸ் சால்வ் பண்ணுவதற்காக பணியிடை மாற்றம் செய்து வருகிறார். ஆனால் அங்கு திடீரென்று ஒரு கொலை நடக்கிறது. அது என்ன என்று பார்ப்பதற்குள், அதே போல் இன்னொரு கொலையும் நடக்கிறது. இதை நானி டீமில் உள்ள இன்னொரு காவல் அதிகாரி கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகள் அனைத்தையும் செய்வது நானி தான் என்று புரிய வருகிறது. நானி ஏன் இந்த கொலைகளை செய்தார்? இதற்கும் இந்த க்ரைமுக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வது தான் இந்த படத்தின் கதை.
இதுவரை நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த நானி இந்த படத்தின் மூலம் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். நடிப்பில் அவர் எப்பவுமே மிரட்டுவார் ஆனால் ஆக்சன் அவதாரத்தில் இன்னும் அழகாக மிரட்டி இருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் ஆரம்பத்தில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் இடைவேளை வரை படம் எப்படி சென்றது என்று தெரியாத அளவிற்கு திரைக்கதை நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி படத்தின் கதை என்ன என்று நமக்கு தெரியும் பொழுது அது ஒரு மையக்கோட்டில் வந்து நிற்கிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாக திரைக்கதையை யோசித்து இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை. அது மட்டும் இல்லாமல் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
படத்தின் இயக்குனர் ஒரு கிரைம் ஸ்டோரியை ஆக்சன் ஸ்டோரியாக மாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் குறையாக பார்க்க படுவது அளவு நிறைந்த வன்முறை காட்சிகள் இந்த படத்தை குழந்தைகள் பெண்கள் யாரும் பார்க்க விடாமல் செய்து விடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சமீபத்தில் வெளிவந்த இந்திய படங்கள் ஆன கில், மார்க்கோ வரிசையில் இந்த படம் ஒரு படி மேலே போய் நிற்கிறது.
ஆக மொத்தத்தில் ஹிட் மூன்றாம் பாகம் ரத்தக் களறியான ஒரு படம். அனைவரும் பார்ப்பதற்கு உகந்தது அல்ல.
