உதயா அஜ்மல் யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். பிரபல அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளரை கொலை செய்ததால் சென்னை புழல் ஜெயிலில் இருக்கிறார் ரவுடி உதயா. அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த, சென்னையில் இருந்து அழைத்து செல்கிறது கான்ஸ்டபிள் அஜ்மல்லை உள்ளிடக்கிய போலீஸ் டீம். அந்த பயணத்தில் உதயாவை கொல்ல ஒரு டீம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து உதயாவை போலீஸ் அஜ்மல் காப்பாற்றினாரா? உதயாவுக்கும் அந்த கொலைக்கும் என்ன தொடர்பு. அவரை கொல்ல துடிப்பது யார். இந்த சண்டையின் முடிவு என்ன என்பது அக்யூஸ்ட் படத்தின் கதை. உதயா ஒரே மாதிரியான நடிப்பையே கொடுத்திருக்கிறார். அஜ்மலும் அதே மாதிரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். யோகி பாபு வழக்கம் போல கத்துகிறார். உதயாவின் அக்காவாக வரும் தீபா பாஸ்கரும்,வில்லனாக வரும் தயாவும் ஓரளவு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். திரைக்கதையை பொறுத்தவரையில் பெரிய சுவாரசியம் இல்லாததால் அதே சமயம் முதல் பாதி உதயா தன் வாழ்க்கையை பற்றி எடுத்துக் கூறும் போது எதுலயுமே நல்ல விஷயங்கள் இல்லாததால் மிகவும் சளிப்படைய வைக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் யோகி பாபு கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் ஆனால் அதுவும் ஜொலிக்கவில்லை. படத்தில் வசனங்களும் சரி, பாடல்களும் சரி, இசையும் சரி பெரிதாக நிற்கவில்லை. ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட் காரணமாக மாற்றி மாற்றி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாசப் பொருத்தவரையில் ஒரு நல்ல கதை கருவை கையில் வைத்திருக்கிறார் ஆனால் அதை தப்பான இடத்தில் கொடுத்து அந்தக் கருவை கலைத்து விட்டார் என்று சொல்லலாம். ஆக மொத்தத்தில் அக்யூஸ்ட் யாரும் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆகா ஓகோ படம் அல்ல.