
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy sivan|2025-03-07
நிறம் மாறும் உலகில் திரை விமர்சனம்
இயக்குனர் இமயம் பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி நட்ராஜ், யோகி பாபு, கனிகா, சாண்டி, ரியோ ராஜ் என பல நட்சத்திரங்களில் நடிப்பில் புது இயக்குனர் பிரிட்டோ BS இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
அம்மா யார்? அம்மா என்றால் என்ன? அம்மா எவ்வளவு பெரிய வலிமை மிக்கவள் என்பதை பற்றி ஆன்தாலஜி ஸ்டைலில் நான்கு கதைகளை சொல்லும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் நான்கு விதமான கதைகள்களை கையாண்டிருக்கிறது.
முதலில் மும்பையில் கேங்ஸ்டர் இன் அம்மா வாழ்க்கை எப்படிப்பட்டது?
ஒரு விவசாய குடும்பத்தில் அம்மாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது?
மீனவ குடும்பத்தில் வாழும் ஒரு ஒரு அம்மாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது?
கணவனை இழந்து தனிமையில் வாழும் ஒரு அம்மாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது? இவர்கள் நாலு பேர்களின் வாழ்க்கையை பதிவு செய்வது தான் இந்த நிறம் மாறும் உலகில் படத்தின் கதை.
கருவாக இது நன்றாக இருந்தாலும், திரைக்கதையாக எடுத்த விதம் அந்த அளவுக்கு விறுவிறுப்பை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் யோகி பாபு சொல்லும் காட்சியைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் அபத்தத்தின் உச்சமாகவே இருக்கின்றன. அதிலும் பாரதிராஜாவின் அந்தாலஜியும் சரி ரியோ ராஜ் அந்தாலஜியும் சரி தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதைகளே.
படம் வெவ்வேறு இடங்களில், வெவேறு காலகட்டங்களில் நடப்பதால் இந்த படத்திற்கு இசை கொஞ்சம் நல்ல வலுவை கூட்டி இருக்கின்றன. ஒளிப்பதிவும் வித்தியாசமாக இருக்கின்றன.
படத்தின் அறிமுக இயக்குனர் பிரிட்டோ அந்தாலஜி கதைக்கு ஒரு நல்ல கருவை தேர்ந்தெடுத்திருந்தார். அதை திரைக்கதையில் மட்டும் கோட்டை விட்டு இருக்கிறார்.
ஆக மொத்தத்தில் நிறம் மாறும் உலகில் ஒரு தடவை பார்க்கக்கூடிய சுமாரான படம்.
