
tamil news ➔ kollywood newsBy sivan|2025-06-07
தன் மகள்களால் பிரச்சனைகளை சந்தித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். ஆனால் தன்னுடைய மகள்களால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்து வெளிவந்த லால் சலாம் படம் தியேட்டரில் மொக்கை வாங்கியது.
ரிலீசுக்கு முன்னரே படத்தின் பல காட்சிகளைக் கொண்ட Hard Disk காணாமல் போனது இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால்தான் படம் ஓடவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். தற்போது மீண்டும் சில காட்சிகளை மாற்றி பட்டி டிங்கரிங் பார்த்து SunNxt ஓடிடி-யில் Extended Version வெளியிட்டனர்.
ஓடிடி-யில் லால் சலாம் படத்திற்கு நல்ல வரவேற்பு வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க பாசிடிவ் ரிவ்யூ எல்லாமே தலைவர் IT விங்கில் இருந்து போஸ்ட் செய்யப்படுவதாக Kollywood வட்டாரம் தெரிவிக்கின்றன. இதற்காக அதிக செலவு செய்து ப்ரொமோட் செய்து வருகின்றனர்.
அதாவது அமேசான் ப்ரைமுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் 35 கோடி பட்ஜெட்டில் Gangs குருதிப்புனல் வெப் சீரியஸ் எடுத்து தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் 80% படப்பிடிப்பு முடியும் முன்னரே 35 கோடி காலி செய்துவிட்டார். அதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மீதமுள்ள படப்பிடிப்பை எடுப்பதற்கு கூடுதலாக பணத்தை அமேசான் தர வேண்டும் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கேட்க அதற்கு அமேசான் ப்ரைம் மறுத்துவிட்டது. இதற்கு மேல் சல்லி பைசா கொடுக்க முடியாது அக்ரிமெண்ட் பிரகாரம் சொன்ன மாதிரி பட்ஜெட்டில் முடித்துக் கொடுக்கும்படி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இப்படி பெரும் சட்ட சிக்கலில் மாட்டி உள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த சூழ்நிலையில் லால் சலாமுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மொத்தமும் சோலி முடிந்து விடும். அடுத்தடுத்து படங்கள் எடுப்பதற்கு முதலீடு செய்வதற்கு இரண்டு பேருக்குமே தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வர மாட்டார்கள் என்பதற்காகவே இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையை செய்து வருகிறது அந்த IT விங்.
எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் வாரிசு நடிகர் நடிகர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமா அணைத்துக் கொள்ளும் இல்லை என்றால் கடைசிவரை போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
