
tamil news ➔ kollywood newsBy sivan|2025-01-13
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் போஸ்டர் வெளியீடு!
தனுஷ் தான் இயக்கி வரும் இட்லி கடை படத்தின் சார்பாக அவரது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தனுஷிற்கும் நித்யா மேனனுக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனனுடன் அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராத், சமுத்திரகனி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது தனுஷ் இயக்கும் 4வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
