
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-16
ஜோரா கைய தட்டுங்க திரைவிமர்சனம்
யோகி பாபு, ஹரிஷ் பரேடி ஜாகிர் அலி, சாந்தி ராவ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், வினிஸ் மில்லேனியம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
யோகி பாபு ஒரு மேஜிக் மேன். அவருடைய அப்பாவை போல் பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் அவருக்கு முழுமையாக மேஜிக் தந்திரங்கள் தெரியவில்லை. இந்நிலையில் அவர் பல அசிங்கம் அவமானங்களை சந்திக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு பிடித்தமான ஒரு குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அதற்கு யோகி பாபு பழிவாங்குகிறார். ஆனால் யோகி பாபு ஏற்கனவே இறந்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவும் நிலையில் இது அவரின் ஆவியா அல்லது உண்மையிலேயே யோகி பாபு தான் கொலை செய்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.
கதை சொல்லும் அளவிற்கு கூட படத்தில் திரைக்கதை எதுவுமே இல்லை.
யோகி பாபு உட்பட எந்த நடிகரின் நடிப்பும் உண்மை தன்மையை வெளிக்காட்டவில்லை அனைத்தும் செயற்கையாகவே உள்ளன.
படத்தின் ஒளிப்பதிவும் சரி பாடல்களும் சரி எதுவுமே ஈர்க்கவில்லை.
இந்தப் படத்தின் இயக்குனர் என்ன நோக்கத்தை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் நினைத்தபடி படம் வரவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
ஆக மொத்தத்தில் ஜோரா கையை தட்டுங்க ஜொலிக்காத ஒரு படம்.
