
bollywood news ➔ kollywood newsBy sivan|2024-07-04
சூர்யா பிறந்தநாளில் கார்த்திக் சுப்பாராஜின் புதுப்பட அப்டேட்
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே இணைத்துள்ளார்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, சண்டைப் பயிற்சியாளராக கேச்சா கம்பக், கலை இயக்குநராக ஜாக்கி, எடிட்டராக ஷபீக் முகமது அலி, ஆகியோர் இணைத்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.
தற்போது சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது. அங்கு வைத்து சூர்யா – பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கப்பட உள்ளன அடுத்தாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது வரும் 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
