
tamil news ➔ kollywood newsBy sivan|2025-04-09
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா?
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ.
இப்படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இப்படத்தின் டிசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமீபத்தில் வெளியான கனிமா பாடல் பட்டித்தொட்டி எங்கு ஹிட்டானது. இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாக உள்ளது.
இச்சூழலில் படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகி வருகின்றன. அதேபோல், படம் ரிலீஸ் ஆக இன்னும் 3 வாரங்களே உள்ளதால், படத்தின் பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளது. அது தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி, வரும் 18 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும், அந்த இசை வெளியீட்டு விழாவிலேயே படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்றும் தகவல்கல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. சிவா இயக்கத்தில் உருவான இப்படம் மக்கல் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றது. இதன் காரணமாக சூர்யாவின் ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
