
tamil news ➔ kollywood newsBy sivan|2025-04-26
சுமோ திரை விமர்சனம்
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோசினோரி தஷீரோ, யோகி பாபு, vtv கணேஷ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் ஹோஸிமின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
ஈசிஆர் ல் ஒரு ரிசார்ட்டில் விடிவி கணேஷ்ஸின் உதவியாளராக மிர்ச்சி சிவா வேலை பார்த்து வருகிறார். அப்போது கடற்கரையில் ஒரு பாடி ஒதுங்குகிறது. அது உயிருடன் இருக்கிறதா? இல்லையா? என்று மிர்ச்சி சிவா தொட்டு பார்க்கும் பொழுது அதன் கையைப் பிடித்துக் கொள்கிறது. அதன் பிறகு அவர் மீது இறக்கப்பட்டு மிர்ச்சி சிவா தன்னுடனே வைத்துக் கொள்கிறார். ஆனால் புதிதாக வந்த அந்த நபர், ஜப்பான் நாட்டு கொடியையும் ரஜினிகாந்தையும் பார்த்து வியப்பில் ஆள்கிறார். இதை உற்று நோக்கிய மிர்ச்சி சிவா யாரு இவர்? எதனால் இங்கு வந்தார் என்பதை தேடி கண்டுபிடிப்பது தான் கதை.
மிர்ச்சி சிவாவும் சரி யோகி பாபுவும் சரி வி டி வி கணேஷும் சரி நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.
திரைக்கதையைப் பொறுத்தவரை முதல் பாதி திரைக்கதை சற்று விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் சென்றாலும், இரண்டாம் பாதி ஜப்பானில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் வெறும் சுமாராகவே இருந்தன. மேலும் அனைத்தும் எதிர்பார்க்கும் காட்சிகளாக இருந்ததனால் சலிப்படைய வைக்கிறது.
இந்தப் படத்தின் இசை காதுக்கு ரம்மியமாக இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு இன்றும் பார்ப்பதற்கு அழகாக இருந்ததற்கு ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுகள். காரணம் இந்த படம் 2020 லயே வெளிவர வேண்டிய படம். கொரோனா காரணமாக முடக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இயக்குனர் ஹோஸிமின் பற்றி பேசியே ஆக வேண்டும். தான் இயக்கும் படம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எங்கிருந்தோ ஏதோ ஒரு கதையை திருடி அந்த ஒரு கதையை நம்ம ஊரு ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மடைமாற்றம் செய்யாமல், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம். மேலும் ஜாதி மதம் நாடு இனம் மொழி என்று எது கடந்தாலும் அன்பு ஒன்று மட்டுமே அனைத்திற்கும் சொந்தம் என்பதை சொல்லி இருக்கும் விதம் அருமை.
ஆக மொத்தத்தில் சுமோ ஒரு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை கலந்த சுமார் ரக படம்.
