
tamil news ➔ kollywood newsBy sivan|2025-06-18
சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம், வட சென்னை படத்தின் ஒரு பகுதியா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்ற செய்திதான் தமிழ் திரையுலகின் ஹாட் டாப்பிக் ஆக இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார். மேலும், முதன் முறையாக இப்படத்துக்காக ப்ரோமோ ஷூட் ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார்.
இதனிடையே, 'வடசென்னை' படத்தில் இருந்து ஓர் அங்கமாக சிம்பு படத்தினை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்புவுடன் நடிக்க நெல்சன், கவின், மணிகண்டன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் 'வடசென்னை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெற்றிமாறன் அளித்த சில பேட்டிகளில், 'ராஜன் வகையறா' என்ற கதையொன்றை வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதில் 'வடசென்னை' படத்தின் அமீர் கதாபாத்திரத்தின் பின்புலமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். அதைத் தான் சிம்புவை வைத்து இயக்கவுள்ளதாக தெரிகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதால் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிந்துவிடும்.
