
bollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-07-16
சர்தார் 2 படத்தில் இணைந்த SJ சூர்யா.
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார்.
இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.
இதனால் இந்த படத்தின் உருவாகும் என்று படத்தின் சக்சஸ் மீட்டின் போதே அறிவித்திருந்தனர். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் மித்ரன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது.
மெய்யழகன் மற்றும் வா வாத்தியார் ஆகிய திரைப்படங்களை முடித்துள்ள கார்த்தி தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார். இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
