அனைத்து வயது ரசிகர்களும் விரும்பி பார்க்கும் ஒரு சமையல் போட்டி தான் குக் வித் கோமாளி. சமையலில் கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களை ரசிகர்கள் அப்படி ரசிப்பார்கள். ரசிகர்களுக்கு பிடித்த கோமாளிகளில் மணிமேகலையும் ஒருவர். ஆனால் இவர் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் வர மாட்டேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் மணிமேகலை. எனவே இது குறித்து கோமாளியாக அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒருவரான புகழிடம் மணிமேகலை ஏன் விலகினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நீங்கள் எல்லோரும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வெளியேறினார் என கூறுகிறீர்கள், அது உண்மையாக இருந்தால் சந்தோஷம் தான். என்ன காரணம் என்பதை நிஜமாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள், மற்றபடி மணிமேகலை தான் இதுகுறித்து கூற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.