மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துபாயில் தொடங்கியது . தொடர்ந்து அஜர்பைஜானில் உள்ள மலைத் தொடர்களில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் உட்பட இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு மாத கால படப்பிடிப்பிற்கு பின் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள். படப்பிடிப்பு முடிந்த நடிகர் அஜித் படக்குழுவினர் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முதல் முறையாக அஜித் மற்றும் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/SureshChandraa/status/1815073010359136494?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1815073010359136494%7Ctwgr%5E66fce96018f2ac3316b6cb624f0166cc803b01f7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவனமீர்த்தது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படம் வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. https://twitter.com/vishnuram03/status/1815204403231748427?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1815204403231748427%7Ctwgr%5E66fce96018f2ac3316b6cb624f0166cc803b01f7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%F