
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-04-03
ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
கடந்த மாதம் விக்ரம் நடித்த வீர தீர சூரன், மோகன்லால் நடித்த எம்புரான் 2, சல்மான் கான் நடித்த சிக்கந்தர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின.
இதில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் அள்ளி வருகிறது. அதேபோல் எம்புரான் படமும் இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் சில முக்கியமான படங்கள் வெளியாக இருக்கின்றன
டெஸ்ட்: மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் டெஸ்ட். எஸ். சஷிகாந்த் இயக்கத்தில் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 04) வெளியாகிறது. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேங்கர்ஸ்: வைகை புயல் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள படம் கேங்கர்ஸ். சுந்தர் சி இயக்கி உள்ள இப்படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் பெங்களுக்கு வெளியான மதகத ராஜா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா அர்ஜுன் தாஸ், பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. அஜித்தின் விடாமுயற்சி சரியாக போகததால், இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ராஜா சாப்: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ராஜா சாப். இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்கி உள்ளார். பிரபாஸுடன், மாளவிகா மோகன், நிதி அகர்வால் நடித்துள்ள இப்படம் அஜித்தின் குட் பேட் அக்லியுடன் ஏப்ர்ல 10ஆம் தேதி வெளியாகிறது.
