
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2024-06-04
உங்களுக்கு தான் "Man of the Match" - தம்பி பவன் கல்யாண்க்கு சிரஞ்சீவி வாழ்த்து
நீங்கள் தான் இந்த தேர்தலின் உண்மையான கேம்சேஞ்சர்' என பவன் கல்யாணுக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அன்புக்குரிய கல்யாண் பாபு, ஆந்திரப் பிரதேச மக்களின் மகத்தான மற்றும் அருமையான முடிவால் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தான் இந்தத் தேர்தலின் உண்மையான கேம் சேஞ்சர்.
நீங்கள் தான் மேன் ஆஃப் தி மேட்ச்! ஆந்திர மக்கள் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறை, உங்களின் தொலைநோக்கு பார்வை, மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய உங்கள் விருப்பம், உங்கள் தியாகங்கள், உங்கள் அரசியல் உத்திகள் ஆகியவை இந்த அற்புதமான தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளன. உங்களை கண்டு பெருமையடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களின் நேர்மை, உழைப்பு மற்றும் திறமை மூலம் மாநிலத்தை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று, மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.
