லைகா தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில்  “இந்தியன் 2” திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிலர் இந்தியன் படத்தின் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு இந்தியன் 2 சரியில்லை என்று கூறுகின்றனர். சிலர் படத்தின் நீளம் கொஞ்சம் சோதிக்கிறது என்று கூறுகின்றனர். ஒரு சிலர் படம் நன்றாகத்தான் உள்ளது, சமூக வலைதளங்கள் தப்பாக மதிப்படுகின்றன என்றும் கூறுகின்றனர். இப்படி இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நீளத்தினை படக்குழுவினர் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைத்துள்ளனர். இந்த குறைத்த பதிப்பு இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் குடும்பங்கள் மறுபடியும் இந்தியன் 2 திரைப்படத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர். இது படக் குழுவினரை சற்று உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.