
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-06-16
இணையத்தையே நொறுங்க விடும் குபேரா பட ட்ரெய்லர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில், 'குபேரா' படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 10 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. அதிகாரம், பணம் ஆகியவற்றை சுற்றி கதை நகர்வது போல் தெரிகிறது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
