மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கும் படம் தக் லைஃப். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ரவி கே. சந்திரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமத் தொகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, தக் லைஃப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் 149 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இந்த படத்தின் வேலையை விரிவாக முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.