
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-04
விஜய் சேதுபதி பாண்டிராஜ் இணையும் முதல் படத்தின் டைட்டில் 'தலைவன் தலைவி '
தமிழ் சினிமாவில் 'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்தது. இந்த நிலையில், இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என்று பெயரிட்டு படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
