நடிப்பு, பாட்டு, இயக்கம் என பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் தெலுகு ஹிந்தி என அனைத்து தளங்களிலும் கால் பதிக்கும் ஒரே நடிகர் இவர்தான்.

என்னதான் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் சினிமாவில் அதிக அக்கறையோடும் கவனத்தோடும் படத்துக்களில் நடித்துக் கொடுப்பவர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கும் வேலையில் இருந்தாலும், அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இளையராஜாவின் பயோபிக் படமான இளையராஜா படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா நடித்து வரும் இந்தப் படத்தின் பட்ஜெட் முதலில் 90 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதாம்.

ஆனால், படம் செல்ல செல்ல இது தற்போது 120 கோடி ரூபாய்க்கு வந்துள்ளதாம். இதனால், தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது மாறியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஜாஸ்தி இருப்பதால் இந்த படம் ஓடிவிடும் என்று தயாரிப்பாளர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.