ஜீவா நடிப்பில் உருவாகும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ரா. வெங்கட் இயக்குகிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா–மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மதுரையில் படப்பிடிப்பின்போது சில காட்சிகளைப் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு, முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகிறது. சமீபத்தில் வெற்றி பெற்ற ‘TTT’ படத்திற்குப் பிறகு, மதுரை மண்ணின் மண்வாசனை கொண்ட கதையில் அவர் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் தனது திரைப்பயணத்தில் வித்தியாசமான படைப்பாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ அமைக்கிறார். M. செல்வராஜ் ஆடைப் பொறுப்பையும், ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். T. உதய் குமார் ஒலிப்பதிவையும், தேனி அன்பு புகைப்படங்களையும் கவனிக்கின்றனர்.
படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், OTT உரிமையை ZEE5 நிறுவனமும் படம் முடிவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளன. டிசம்பர் 24 வெளியீட்டை முன்னிட்டு படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


