

tamil news ➔ kollywood newsBy sivan|2025-04-21
என்னது GBU வில் முதலில் நடிக்க இருந்த நடிகை இந்த நடிகையா?
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, நடிகர் அஜித்தின் பெரிய ரசிகர் ஆவார். இவர் அஜித்தை வைத்து தற்போது குட் பேட் அக்லி படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
கிளாசிக் அஜித்தை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று பலர் புலம்பி வந்த நிலையில், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இந்த குறையை அவர் தீர்த்துள்ளார். இதில், அஜித் கேங்க்ஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் இது. குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர். படத்தில் இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்றபடி சில காட்சிகளையும் வைத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, தெலுங்கு நடிகர் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, பிரியா பிரகாஷ் வாரியார், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படம், முழுக்க முழுக்க பழைய பாடல்களாலும், மீம் ரெஃபரன்ஸ்களாலும் ஆனதாக இருக்கிறது. இதை தாண்டி, படம் என்டர்டெயினிங் ஆக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது. அர்ஜுன் தாஸின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம், கண்டிப்பாக வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இந்த படம் வெளியாகி தற்போது வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி விரைவில் 180 கோடி வசூலை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்ரனின் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடனமாடியது சமூக வலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அதிலும் நடிகை பிரியா வாரியருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை பிரியா வாரியர் கிடையாதாம், முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஸ்ரீலீலா தான் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, அதன்பின் பிரியா வாரியர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.


