
tamil news ➔ kollywood newsBy sivan|2025-03-10
அஜித்தின் GBU பிரிவியூ எப்போது தெரியுமா?
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.
கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. மேலும் புக்கிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 10ம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தை தமிழ்நாட்டில் 9ம் தேதி பிரீமியர் பண்ண போவதாக சொல்லப்படுகிறது. அதுவும் ஏப்ரல் 9ம் தேதி இரவு 10:30 மணிக்கு இந்த படத்தின் பிரீமியர் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளது
